திருகோணமலையில் புத்தர் சிலை நிறுவப்பட்ட சம்பவம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ள கருத்தை அவர் மீளப் பெற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற பாதீடு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவித்த அவர்,
எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் அந்த சிலையை அந்த இடத்திலேயே வைக்க வேண்டும் இது ஒரு தேசிய பிரச்சினை என்று ஆக்கிரோசித்தது தான் மிகப்பெரிய அதிசயம் மேலும் ஜனாதிபதி தேர்தலிலேயெ தமிழ் மக்கள் அவர்களுக்கு வாக்குபோட்டு இருந்தார்கள் அவர் ஜனாதிபதியா வந்தால் எல்லாம் நடக்கும் என்றும் அவர்கள் நினைத்தார்கள்.
இந் நிலையில் சஜித் பிரேமதாசவின் கருத்து “சஜித் பிரேமதாச தமிழ் மக்களை புண்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது கருத்தை திரும்பப் பெற்றுக் கொண்டு, தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார். மேலும் அவர் தமிழ் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோருவதுதான இந்த நாட்டிலேயே நீதியாக இருக்கும் என்று சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்தார்.








