யாழ்ப்பாண மாவட்ட போதை தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கொழும்பில் உள்ள பிரபல பாடசாலை மாணவன் மற்றும் யாழ்ப்பாணம் ஊரெழு பகுதியை சேர்ந்த மாணவர் ஒருவர், போதை மாத்திரைகள் வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெளிமாவட்ட பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய இருவரையும் பொலிஸார் தடுத்து விசாரணை நடத்தினர்.

சோதனை மேற்கொள்ளும் போது, கொழும்பு மாணவனிடம் 1,700 போதை மாத்திரைகள், யாழ்ப்பாண மாணவனிடம் 200 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.

விசாரணைகளின் பின்னர் இருவரையும் யாழ்ப்பாண நீதிமன்றத்தில் சமர்ப்பித்தபோது, நீதிமன்றம் இருவரையும் அச்சுவேலியில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் தடுத்து வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here