நிலக்கரிப் பயன்பாட்டினால் எழும் மேலதிக செலவினங்களை மின்சாரக் கட்டணத் திருத்தங்களிலிருந்து விலக்க இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL), முடிவு செய்துள்ளது.

இதன்படி, கட்டண மாற்றங்களைத் தீர்மானிக்கும்போது, ​​மின்சார உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் விநியோகத்தில் ஏற்படும் நியாயமான செலவுகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும் என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நிலக்கரிப் பயன்பாடு தொடர்பான மேலதிக செலவினங்கள் அல்லது பிற நியாயமற்ற செலவினங்கள் சமீபத்திய கட்டணத் திருத்தத்தில் சேர்க்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இத்தகைய மேலதிக அல்லது நியாயமற்ற செலவினங்களை எதிர்கால மின்சாரக் கட்டணத் திருத்த முன்மொழிவுகள் அனைத்திலிருந்தும் விலக்கி, இந்தக் கொள்கையைத் தொடர ஒருமனதாகத் தீர்மானித்துள்ளதாக ஆணைக்குழு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here