மத்திய கிழக்கு மோதல் தொடங்கி பின்னர் நாட்டுக்கு மசகெண்ணை ஏற்றி வரும் முதல் கப்பல் நாளை (17) தீவை வந்தடைய உள்ளது என சிலோன் பெட்ரோலியம் சேமிப்பு முனையங்கள் லிமிடெட் (சிபிஎஸ்டிஎல்) அறிவித்துள்ளது.

குறித்த கப்பல் நாட்டுக்கு 97,500 மெட்ரிக் தொன் மசகெண்ணையைக் கொண்டு வருவதாக அப்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டொக்டர் மயூர நெத்திகுமார தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த மாத இறுதிக்குள் மேலும் ஒரு கப்பல் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், அமெரிக்காவிலிருந்து வரும் WTI கப்பலில் தற்போது எண்ணெய் ஏற்றப்பட்டு வருகிறது, அது இன்று இலங்கையை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது,” என தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, சீரான மசகெண்ணை விநியோகத்தைப் பாதுகாப்பதில் சிலோன் பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு (சிபிசி) காணப்பட்ட நெருக்கடி தற்போது தீர்க்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here