நாட்டின் அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றும் நோக்கில் பெரிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புத்தாண்டு திட்டங்கள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.
“அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றுவதற்கு எங்களிடம் ஒரு பெரிய திட்டம் உள்ளது. நிச்சயமாக மாற்றம் நிகழும்,” என அவர் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) இந்த மாற்றத்திற்கு தயாராக உள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.
அத்துடன் இந்த வருடம் சர்வதேச தொழிலாளர் தினம் மற்றும் வெசாக் பண்டிகை ஆகியன ஒரே நாளில் கொண்டாடப்பட இருப்பதனால், தனது கட்சி மே தின பேரணியை நடத்தாது என்றும் அந்த நாள் மத அனுசரிப்புகளுடன் கொண்டாடப்பட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.








