போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்க முன்மொழிவுக்கான பதிலை பாகிஸ்தான் வழியாக வழங்கியுள்ளதாக ஈரானிய அரசு செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏ (IRNA) தெரிவித்துள்ளது.
ஈரானின் கோரிக்கையில், பேச்சுவார்த்தைகளின் முதல் கட்டம், பகைமையை முடிவுக்குக் கொண்டுவருவதில் கவனம் செலுத்தும் என்றும் வளைகுடா மற்றும் ஹோர்முஸ் நீரிணை பகுதியில் “கடல் பாதுகாப்பை” உறுதி செய்வதில் தற்பொழுது அதிகளவு கவனம் செலுத்தப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அணு ஆயுதம் தயாரிப்பதை நிறுத்துதல், சுமார் 12 வருடங்கள் வரையில் யுரேனியம் செறிவூட்டுவதை நிறுத்துதல், 440 கிலோ 60% செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைத்தல் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கையை அமெரிக்கா ஈரானிடம் முன்வைத்துள்ளது.
இதேவேளை பொருளாதார தடைகளை நீக்குதல், வங்கிகளில் முடங்கியுள்ள பில்லியன் கணக்கான ஈரானியப் பணத்தை விடுவித்தல்,ஈரானியத் துறைமுகங்களில் கடற்படை முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவருதல் உள்ளிட்ட கோரிக்கையை ஈரான் முன்வைத்துள்ளது.
இவற்றில் முதல் கட்டமாக வளைகுடா மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் “கடல்சார் பாதுகாப்பு” உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் உலகின் 20% எண்ணெய் கடந்து செல்லும் கடல் மார்க்கம் என்பதால் இது அத்தியாவசியமானது என்றும் ஈரான் இந்த விடயத்தின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டியுள்ளது.








