கொழும்பு,டேம் வீதியில் (கேஸ்பா) உள்ள கட்டிடமொன்றில் இன்று பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்காக, 10 தீயணைப்பு வாகனங்கள் ஏற்கனவே சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.
சேதத்தின் அளவு அல்லது தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.








