வில்கமுவ, ஹெட்டிபொல பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 56 வயது தந்தையும், அவரது 25 வயது மகளும் உயிரிழந்தனர்.

இன்று (வெள்ளிக்கிழமை) காலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

குறித்த தந்தை, தனது மகளை அவளது பணியிடத்திற்கு துவிச்சக்கரவண்டியில் அழைத்து சென்று கொண்டிருந்த போது , ​​திடீரென ஒரு காட்டு யானை அவர்களை மோதியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில் அவர்களது உடல்கள் பின்னர் வில்கமுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here