தமிழக முதலமைச்சராக பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு அரசியல் தரப்பினர் மற்றும் சினிமா துறையின் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இயக்குநர் வெங்கட் பிரபு இன்று முதல் அமைச்சரை சந்தித்து அவருக்கு அன்பளிப்பொன்றை வழங்கியுள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கிய ‘கோட்’ திரைப்படத்தில் விஜய் கதாநாயகனாக நடித்திருந்தார். அந்த படத்தில் விஜய்யின் கார் இலக்கத் தகடு ‘TN 07 CM 2026’ என்று எழுதப்பட்டிருக்கும்.
விஜய் 2026 முதல் அமைச்சர் ஆவார் என்று குறிப்பிடும்படி படத்தில் அதனை வெங்கட் பிரபு வைத்திருந்தார்.
இதனை தொடர்ந்து அந்த இலக்க தகடு எழுதப்பட்ட அன்பளிப்பை முதலமைச்சரிடம் வெங்கட் பிரபு இன்று பரிசளித்தார். இது தொடர்பான தனது ‘எக்ஸ்’ தள பதிவில் ‘ஒரு வரலாறு படைக்கப்பட்டுள்ளது அதனை முதல் முறையாக ‘கோட்’ படத்தில் நாங்கள் வெளிப்படுத்தி இருந்தோம்’ என்று குறிப்பிட்டு விஜய்க்கு அன்பளிப்பு வழங்கிய படத்தை பகிர்ந்துள்ளார்.








