புகையிலைப் பயன்பாட்டினால் வருடந்தோறும் 22,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர் என புகையிலை மற்றும் மதுபானம் மீதான தேசிய அதிகாரசபை தெரிவித்துள்ளது.

புகையிலைப் பயன்பாட்டினால் 200-க்கும் மேற்பட்ட நோய்கள் ஏற்படுவதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அதிகாரசபையின் தலைவர்,வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

2026-ஆம் ஆண்டு உலகப் புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்றபோது வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,

“இந்தச் சிறிய நாட்டில் புகையிலைப் பயன்பாட்டினால் வருடந்தோறும் சுமார் 22,000 பேர் அகால மரணம் அடைகின்றனர்.

பொருளாதார இழப்புகளை எடுத்து கொண்டால் , 2016-ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி, நாம் ஆண்டுதோறும் சுமார் 214 பில்லியன் ரூபாவை இழக்கின்றோம். இது ஒரு தாமரைக் கோபுரத்தைக் அமைப்பதற்கான செலவீனம் ஆகும்.

புகையிலையால் ஏற்படும் பாதிப்புக்களை பராமரிக்க நாம் செலவிடும் தொகையானது, 16 தாமரைக் கோபுரங்களைக் கட்டுவதற்கும், இரண்டு நெடுஞ்சாலைகளை அமைப்பதற்கும் செலவிடப்படும் தொகைக்குச் சமம் ஆகும் என தெரிவித்தார்.

இதேவேளை சிகரெட் பயன்பாட்டினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் அவர் இதன்போது விளக்கினார்.

“இலங்கையில் மாத்திரம், 9 முதல் 11 மில்லியன் வரையிலான சிகரெட் வடிகட்டிகள் சுற்றுச்சூழலில் வெளியிடப்படுகின்றன. பயன்படுத்தப்பட்ட இந்த வடிகட்டிகளில் கடுமையான இரசாயனங்களும் புற்றுநோயை உண்டாக்கும் காரணிகளும் உள்ளன. இவற்றால் பாரியளவிலான சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரப் பாதிப்புகள் ஏற்படுகின்றன என சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here