நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட எந்தவித வாய்ப்பும் இல்லை என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் மயூர நெட்டிகுமாரகே தெரிவித்துள்ளார்.
ஜூலை இறுதி வரை பயன்படுத்த கூடிய அளவுக்கு போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளது.
அத்துடன் விநியோகத்தை சீராக பேணுவதற்காக, மேலும் இரண்டு மசகெண்ணெய் கப்பல்கள் மே 28 மற்றும் மே 31 ஆகிய திகதிகளில் நாட்டை வந்தடையவுள்ளன என அவர் தெரிவித்துள்ளார் .
மேலும் தற்போது எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பாக திட்டமிடப்படவில்லை எனவும் பற்றாக்குறை குறித்த செய்திகள் தவறானவை என்றும் விளக்கியுள்ளார்.
மே மற்றும் ஜூன் மாதங்களுக்குத் தேவையான எரிபொருள் ஏற்கனவே நாட்டில் காணப்படுகிறது எனவும் எரிபொருள் விநியோகம் தடையின்றி மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








