எரிபொருள் விலை அதிகரிப்பினால் பேருந்துக் கட்டணங்கள் அதிகரிக்க வாய்ப்பில்லை என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள பேருந்துக் கட்டணத் திருத்த சூத்திரத்தின்படியே பேருந்துக் கட்டணங்கள் திருத்தப்படுகின்றன என்றும், அண்மையில் திருத்தப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு ஏற்ப பேருந்து கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
எரிபொருள் விலைகள் 4%-க்கும் அதிகமாக கூடினால் மாத்திரமே பேருந்து கட்டணத்தை சீர் செய்வது தொடர்பில் பரிசீலிக்கப்படும். மிகச் சமீபத்திய எரிபொருள் விலை அதிகரிப்பு அந்த வரம்பைத் எட்டவில்லை, எனவே இந்த நிலையில் பேருந்துக் கட்டணங்களைத் திருத்த வேண்டிய தேவையில்லை என அவர் குறிப்பிட்டார்.
இந்த வார எரிபொருள் விலை திருத்தத்தைத் தொடர்ந்து போக்குவரத்துச் செலவுகள் அதிகரிக்கக்கூடும் என்ற பொதுமக்களின் கவலைகளுக்கு மத்தியில் அவர் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.








