இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகள் அனைத்திலும் புதன்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்று (04) அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் மதிப்பு கணிசமாக சரிந்துள்ளது. சில வங்கிகளில் அதன் விற்பனை விகிதம் ரூ. 340-ஐ எட்டியுள்ளது.
இதற்கமைய செலான் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்வனவு விகிதம் ரூ. 326.25-லிருந்து ரூ. 329.25 ஆகவும், விற்பனை விகிதம் ரூ. 339-லிருந்து ரூ. 342 ஆகவும் அதிகரித்துள்ளது.
என்.டி.பி வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்வனவு விகிதம் ரூ. 328-லிருந்து ரூ. 330 ஆகவும், விற்பனை விகிதம் ரூ. 337-லிருந்து ரூ. 339 ஆகவும் அதிகரித்துள்ளது.
மக்கள் வங்கியின் அறிக்கையின்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விகிதம் ரூ. 328.48-லிருந்து ரூ. 330.94 ஆகவும்,விற்பனை விகிதம் ரூ. 337.77-லிருந்து ரூ. 340.31 ஆகவும் அதிகரித்துள்ளது.
இதற்கிடையே, கொமர்ஷல் வங்கியில்,கொள்வனவு மற்றும் விற்பனை விலைகள் முறையே ரூ. 325.46-லிருந்து ரூ. 328.44 ஆகவும், ரூ. 336.50-லிருந்து ரூ. 339.50 ஆகவும் அதிகரித்துள்ளன.
சம்பத் வங்கியில், கொள்வனவு மற்றும் விற்பனை விலைகள் முறையே ரூ. 328-லிருந்து ரூ. 330.50 ஆகவும், ரூ. 337-லிருந்து ரூ. 339.50 ஆகவும் அதிகரித்துள்ளன.








