மப்பகந்த பகுதியில் இருந்து நாவலப்பிட்டி நோக்கி இன்று காலை (04 சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது ஒரு பெரிய யூகலிப்டஸ் (கருப்பன்தேயிலை) எனப்படும் மரம் விழுந்ததில், ஒரு பாடசாலை மாணவர் உட்பட மூவர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களில், ஒரு மாணவர், அவரது தாயார் மற்றும் மற்றொரு பெண் ஆகியோர் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் முச்சக்கர வண்டியின் சாரதி உயிர் தப்பியுள்ளார். இந்த விபத்து காலை சுமார் 6:45 மணியளவில் சம்பவித்ததாகக் கூறப்படுகிறது.
இதனை அடுத்து அப்பகுதி பொலிஸ் அதிகாரிகளும் மக்களும் விழுந்த மரத்தின் அடியில் சிக்கியிருந்த உடல்களை மீட்டு நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து நாவலப்பிட்டி பொலிசார் மேலதிக விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.








