இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகள் சகலவற்றிலும் கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று (08), அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் மதிப்பு சற்றே அதிகரித்துள்ளது.
டொலரின் விற்பனை விகிதம் சில வங்கிகளில் ரூ. 340-எனும் நிலையான விலையில் காணப்படுகிறது.
செலான் வங்கியின் அறிக்கைக்கமைய,அமெரிக்க டொலரின் கொள்வனவு விகிதம் ரூ. 330.25 ஆகவும்,விற்பனை விகிதம் ரூ. 341 ஆகவும் மாற்றமின்றி உள்ளது.
என்.டி.பி வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்வனவு விகிதம் ரூ.332.50-லிருந்து ரூ. 331.25 ஆகவும், விற்பனை விகிதம் ரூ. 341.50-லிருந்து ரூ. 340.25 ஆகவும் குறைந்துள்ளது.
இதேவேளை, மக்கள் வங்கியில்,அமெரிக்க டொலரின் கொள்வனவு விகிதம் ரூ. 330.93-லிருந்து ரூ. 330.20 ஆகவும், விற்பனை விகிதம் ரூ. 339.73-லிருந்து ரூ. 338.98 ஆகவும் குறைந்துள்ளது.
கமர்ஷியல் வங்கியில்,கொள்வனவு மற்றும் விற்பனை விலைகள் முறையே ரூ. 329.44-லிருந்து ரூ. 328.94 ஆகவும், ரூ. 340.50-லிருந்து ரூ. 340 ஆகவும் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பத் வங்கியில், டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விலைகள் முறையே ரூ. 332.50-லிருந்து ரூ. 331.50 ஆகவும், ரூ. 341.50-லிருந்து ரூ. 340.50 ஆகவும் குறைந்துள்ளன.








