ஐக்கிய அரபு அமீரகத்தில் சமூக வலைத்தள பயன்பாட்டுக்கான குறைந்தபட்ச வயதை15 ஆக நிர்ணயிக்கும் சட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக அந்நாட்டு ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த கடுமையான நடவடிக்கையை அறிமுகப்படுத்திய முதல் அரபு நாடு என்ற வரலாற்றை அந்த நாடு படைத்துள்ளது.
இதற்கமைய 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் தனிப்பட்ட சமூக ஊடக கணக்குகளை உருவாக்குவதும் பயன்படுத்துவதும் முற்றிலும் தடை செய்யப்படுகிறது.
மேலும் சமூக ஊடக வலைத்தளங்களில் உள்ள பல்வேறு குழுக்களை அணுகுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
சிறுவர்களின் பாதுகாப்புக்காக இந்த கடுமையான சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.







