அஸ்வெசும நலத்திட்ட கொடுப்பனவின் ஜூன் மாதத்துக்கான 2ம் கட்ட பணம் நாளை (23) முதல் கிடைப்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய 2,70,025 குடும்பங்களுக்கான 328 கோடி ரூபாய் (3,287,163,750/=) கொடுப்பனவு அஸ்வெசும பயனாளிகளின் கணக்கில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.








