மசகு எண்ணெய் இன்று விலை சுமார் 1 வீதம் வரையில் சரிந்துள்ளது. இதன் மூலம் தொடர்ந்து மூன்றாவது நாளாக எண்ணெய் விலை இறக்கம் கண்டுள்ளது.

உலக எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கை கையாளும் ஹோர்முஸ் நீரிணை தொடர்பான மறைமுக பேச்சுவார்த்தையில் ஈரானும் அமெரிக்காவும் முன்னேற்றம் கண்டுள்ளதாக கட்டார் தெரிவித்தமையே இதற்கு காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஜூன் மாதம் போர் நிறுத்தத்திற்கு வழிவகுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பான விடயங்களில் “நேர்மறையான முன்னேற்றம்” ஏற்பட்டுள்ளதாக கட்டார் வெளியுறவு அமைச்சின் செய்தி தொடர்பாளர் X தளத்தில் பதிவிட்டார்.

இதனை அடுத்து GMT நேரப்படி 02:56 மணியளவில் பிரெண்ட் மசகு எண்ணெய் 77 சென்ட் அல்லது 1.1% சரிந்து பீப்பாய் ஒன்று 70.80- டொலர்களுக்கும் அமெரிக்க மேற்கு டெக்சாஸ் இடைநிலை மசகு எண்ணெய் 84 சென்ட் அல்லது 1.2% சரிந்து $67.74-க்கும் விற்பனை ஆகியுள்ளது.

அத்துடன் ஞாயிற்றுக்கிழமை கூடும் (OPEC+) ஒபெக் எண்ணெய் உற்பத்தி நாடுகள், ஓகஸ்ட் மாதம் முதல் உற்பத்தி இலக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக புதன்கிழமை அதன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேநேரம் ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதி ஊர்வலங்கள் ஜூலை 9-ம் திகதி இடம்பெற்ற பின்னர் ஈரான் மற்றும் அமெரிக்க பேச்சுவார்த்தையாளர்களுக்கு இடையே அடுத்த சந்திப்பு நடைபெறும் என்று கட்டார் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here