நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்திய வன்முறையை தொடர்ந்து, அங்கிருந்த சுமார் 700 கைதிகள் அங்குனகொலபெலஸ்ஸ, போகம்பர, அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் குருவிட்ட சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்று (05) இரண்டு கைதிகள் குழுக்களுக்கிடையே ஆரம்பித்த மோதல் அதிகரித்ததை அடுத்து, இன்று இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த மோதல் விளக்கமறியலில் உள்ள கைதிகள் குழுவிற்கும், தண்டனை பெற்ற கைதிகள் குழுவிற்கும் இடையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 சிறை அதிகாரிகள் உட்பட 26 ஆக அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here