2025-ஆம் ஆண்டில் இந்திய தம்பதிகள் மத்தியில் இலங்கையில் திருமணம் நடத்துவதற்கான வரவேற்பு 25% அதிகரித்துள்ளதாக” ‘WedMeGood’ நிறுவனத்தின் “Destination Wedding Report 2026″தெரிவிக்கிறது.

இந்தியாவுக்கு அருகாமை, எளிதான பயண வசதி, சொகுசு ஹோட்டல்கள் மற்றும் அனுபவம் சார்ந்த கொண்டாட்டங்கள் காரணமாக இலங்கை வேகமாக வளரும் திருமண இடமாக மாறியுள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் இலங்கைக்கான இந்திய திருமண பதிவுகள் ஆண்டுக்கு 20-25% வரை வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அறிக்கையின் படி,2025-இல் அதிகம் பதிவான இலங்கையின் ஹோட்டல்கள்,

– Shangri-La – ஹம்பாந்தோட்டை & கொழும்பு

– Amaya Hills – கண்டி

– The Grand Hotel – நுவரெலியா

– Jetwing Lagoon – நீர்கொழும்பு, ஆகியன எனத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் தாய்லாந்து தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 2025-இல் 25 இலட்சம் இந்தியர்கள் திருமணத்திற்காக தாய்லாந்துக்கு  சென்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 16% அதிகம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

2025-இல் 4 திருமணங்களில் 1 திருமணம் destination wedding ஆக இருந்தது எனவும் 2028-ஆம் ஆண்டுக்குள் இது 30-32% ஆக அதிகரிக்கும் எனவும் அறிக்கை கூறுகிறது.

இந்த கருத்து கணிப்பு 2.5 லட்சம் வாடிக்கையாளர்கள் மற்றும் 24,000 திருமண தொழில் நிபுணர்களிடம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here