2026 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு இதுவரை தேசிய அடையாள அட்டை (NIC) பெறாத தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள், பெற்றோர் அல்லது பாதுகாவலரின் தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று (15) வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில், பரீட்சைக்கான இணையதள விண்ணப்பங்கள் ஏற்கனவே அறிவித்தபடி ஜூலை 3 ஆம் திகதி முதல் ஜூலை 23 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதுவரை அடையாள அட்டை பெறாத பாடசாலை மாணவர்கள், விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் போது தங்கள் பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பணிப்புரைகளை பின்பற்ற வேண்டும்.

இதேநேரம் அடையாள அட்டை இல்லாத தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள், பெற்றோர் அல்லது பாதுகாவலரின் தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி பதிவு செய்து விண்ணப்பங்களை சமர்பிக்கலாம்.

அடையாள அட்டை பெறவில்லை என்பதற்காக தகுதியான விண்ணப்பதாரர்கள் ஜூலை 23 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிப்பதை தவறவிடக் கூடாது என திணைக்களம் வலியுறுத்தியது.

அத்துடன் விண்ணப்ப காலம் எந்த காரணத்திற்காகவும் நீடிக்கப்படமாட்டாது எனவும்  கூறியுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு விண்ணப்பதாரர்கள் திணைக்களத்தின் ஹொட்லைன் 1911 ஊடாகவோ, அல்லது கீழ்காணும் தொலைபேசி இலக்கங்களிலோ *0112-784537, 0112-786616, 0112-784208  தொடர்பு கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here