பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள், 237 கிராம் கொக்கெய்ன் வைத்திருந்த 54 வயது அங்கோலா நாட்டு பெண் ஒருவரை கைது செய்துள்ளனர்.

அதன் பெறுமதி 10 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த பெண் அங்கோலா ,அடிஸ் அபாபா, எத்தியோப்பியா,தோஹா, கட்டார் வழியாக இலங்கையை வந்தடைந்துள்ளார்.

குறித்த பெண் விமானத்தில் இருந்து இறங்கிய பின் சக்கரநாற்காலி முனையம் வழியாக சென்றமை சுங்க அதிகாரிகளின் சந்தேகத்தை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனை அடுத்து சந்தேகநபர் தன்னிச்சையாக 14 கொக்கெய்ன் பொதிகளை சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார்.

மேலும் பல பொதிகளை விழுங்கியதாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார். அவை தற்போது மருத்துவ கண்காணிப்பில் உள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here