சட்டவிரோதமாக படகு மூலம் தனுஷ்கோடிக்கு சென்ற இலங்கையர்களை இந்திய கடலோர பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 30 மற்றும் 31 வயதுடையவர்கள் என்றும், அவர்கள் வத்தளை பகுதியை  சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வியாழக்கிழமை வத்தளை பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுடன் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என இலங்கை அதிகாரிகள் சந்தேகம் தெரிவிப்பதாக “இந்து” நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், இவர்கள் இருவருக்கு எதிராகவும் இலங்கையில் போதைப்பொருள் தொடர்பான 3 வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர்களை தம்மிடம் ஒப்படைக்குமாறு இலங்கை அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், சந்தேகநபர்கள் தற்போது திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள விசேட முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

அத்துடன் ஒரு வாரத்திற்குள் அவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப எதிர்பார்ப்பதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here