ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையுடன் (IRGC) தொடர்புடைய பல்வேறு தளங்கள் மீது அமெரிக்கா புதிய அலை வான் தாக்குதல்களை நடத்தியுள்ளது என அமெரிக்க மத்திய கட்டளை பிரிவு (CENTCOM) அறிவித்துள்ளது.
இந்த தாக்குதல்கள் இராணுவ கட்டளை மையங்கள், ஏவுகணை மற்றும் ட்ரோன் வசதிகள், கடலோர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு தளங்கள், மற்றும் கடற்படை திறன்கள் ஆகியவற்றை இலக்காகக் கொண்டிருந்தன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க படைகள் மீது ஈரான் மேற்கொண்டதாக கூறப்படும் எதிர்பாராத பொலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் முயற்சிக்கு பதிலளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
ஈரானின் அனைத்து உள்வரும் ஏவுகணைகளும் இடைமறிக்கப்பட்டதாகவும், அமெரிக்க வீரர்கள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் வோஷிங்டன் கூறியுள்ளது.








