அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது நடத்த திட்டமிடப்பட்டிருந்த தாக்குதல்களை ரத்து செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தெஹ்ரானுடன் விரைவாக ஒப்பந்தம் எட்டும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

ஈரான் மற்றும் பிற மத்திய கிழக்கு நாடுகள் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு அளிக்குமாறு கோரியதால், இஸ்ரேலுடன் ஒருங்கிணைந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ட்ரம்ப் தனது Truth Social தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதேவேளை ஹோர்முஸ் நீரிணையை “உடனடியாக” திறப்பது மற்றும் ஈரானின் அணு அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைப்பது ஆகியன ஒப்பந்தத்தில் அடங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒப்பந்தத்தின் “அடிப்படைகள்” ஏற்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ள போதும், ஈரான் இதனை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

அமெரிக்க இராணுவம் “தயார் நிலையில்” உள்ளது. ஆனால் இராஜதந்திர தீர்வுக்கு நேரம் கொடுக்கும் வகையில் தாக்குதல்கள் தாமதப்படுத்தப்பட்டுள்ளன.

இதேநேரம் வாஷிங்டன் பதற்றத்தை அதிகரிப்பதாக ஈரான் குற்றம் சாட்டி உள்ளது.

மேலும் மோதல் விரிவடையும் சந்தர்ப்பத்தில் அமெரிக்காவிற்கு ஒத்துழைக்கும் நாடுகள் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்தது.

இதற்கிடையே மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கர்கள் அவதானமாக இருக்குமாறும், பதற்றம் அதிகரித்தால் விமான ரத்து மற்றும் வான்வெளி மூடல்கள் ஏற்படலாம் எனவும் அமெரிக்க பாதுகாப்பு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here