அஹுங்கல்ல, எகொடமுல்ல பிரதேசத்திலுள்ள  வீடொன்றில் தனியாக வசித்து வந்த பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார்.

 65 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண்ணை பல நாட்களாக காணவில்லை எனவும் அவர் தங்கியிருந்த வீட்டின் திசையில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் அயலவர்கள் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் அஹுங்கல்ல பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதற்கமைய, நேற்றைய தினம்  (19) பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், ​​குறித்த பெண் வீட்டினுள் உடல் சிதைந்த நிலையில் நாற்காலியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேலும் சடலம் தொடர்பான நீதவான் விசாரணைகளை தொடர்ந்து குறித்த பெண்ணின் சடலம் பலபிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அஹுங்கல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here