அம்பலாங்கொடை இடந்தோட்டை – பொனதுவ பிரதேசத்தில் இன்று (14) அதிகாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட பாதாள உலக உறுப்பினரான ‘சமன்கொல்லா’ என்ற அகம்பொடி சஜித் சமன் பியந்தவின் வீட்டின் மீதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் வீட்டின் சுவர் மற்றும் கதவுகளை பல தோட்டாக்கள் தாக்கியுள்ளதுடன்  துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தென் மாகாணத்தில் அண்மையில் இடம்பெற்ற குற்றச்செயல்கள் மீண்டும் இடம்பெறாத வகையில் நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பணிப்புரை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here