காலி பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதியை கத்தியால் குத்தப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்  நீண்ட காலமாகத் தனது அயல் வீட்டாருடன் முரண்பாட்டில் ஈடுபட்டிருந்த நிலையில் சம்பவத்தின் போது இவர்,  அயல் வீட்டிற்கு முன்பாக சென்று அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போதே இந்த அயல் வீட்டின் உரிமையாளரான சந்தேக நபர் இவரைக் கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து காயமடைந்தவர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here