வவுனியா வைரவபுளியங்குளம், புகையிரத நிலைய வீதியில் மோட்டர் சைக்கிளை மோதிவிட்டு கார் ஒன்று தப்பிச் சென்றுள்ளதுடன், குறித்த விபத்தில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்தில் மோட்டர் சைக்கிளில் பயணித்த தாயும், மகனும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் சேதமடைந்த மோட்டர் சைக்கிள் பொலிசாரால் எடுத்துச் செல்லப்பட்டதுடன், தப்பிச்  சென்ற காரினை அப் பகுதியில் நின்றவர்கள் எடுத்த புகைப்படம் மற்றும் சிசீரீவி கணொளி உதவியுடன் வவுனியா பொலிசார் தேடி வருகின்றனர்.

EP CBL 6879 இலக்கமுடைய காரே விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here