மாதகல் – சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில்  தெரியவருகையில்,

குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது.அதனால் தான் வீட்டு கிணற்றில் விழுந்துள்ளார் என தெரிய வந்துள்ளது.

பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி. தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் இன்றையதினம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here