மன்னாரிலிருந்து யாழ்ப்பாணத்திற்குச் சட்ட விரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகுதி கடல் ஆமை இறைச்சிகளுடன் 2 சந்தேக நபர்கள் நேற்றைய தினம் பள்ளமடு பிரதான வீதியில் வைத்து மன்னார் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்து 82 கிலோ கடலாமை இறைச்சி  மீட்கப்பட்டுள்ளது.

மீன்கள் பொதி செய்து கொண்டு செல்லும் பெட்டியில்  குறித்த கடலாமை பொதி செய்யப்பட்டு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட நிலையிலே மன்னார் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட வாகனச் சோதனையின் போது குறித்த கடலாமை இறைச்சிகள் மீட்கப்பட்டுள்ளன.

இவ் இறைச்சிகளை கொண்டு சென்ற இரண்டு நபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என செய்திகள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here