Thursday, April 30, 2026
No menu items!

பிரதான வீதி

வெல்லவாய – தனமல்வில பிரதான வீதியில் விபத்து; இருவர் காயம்!

வெல்லவாய - தனமல்வில பிரதான வீதியில், யாலபோவ டிப்போவிற்கு எதிரே இன்று (08) காலை லொறி ஒன்றும், மோட்டார் வாகனம் ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மோட்டார் வாகனத்தில் பயணித்த இருவர் காயமடைந்து வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் லொறி வீதியில் கவிழ்ந்துள்ள நிலையில், போக்குவரத்துக்குக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக...

வீதிகளில் பனிமூட்டமான நிலை காணப்படுவதால் போக்குவரத்தில் பாதிப்பு!

நுவரெலியாவை நோக்கி செல்லும் பல பிரதான வீதிகளில் பனிமூட்டமான நிலை காணப்படுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா தொடக்கம் நுவரெலியா வரையிலும், நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் நுவரெலியா முதல் ஹக்கல வரையிலும், நுவரெலியா - கம்பளை பிரதான வீதியில் நுவரெலியாவிலிருந்து பம்பரக்கலை வரையிலும் இந்த பனிமூட்டம் காணப்படுவதாக...

யாழ் – கண்டி பிரதான வீதியின் நுணாவில் சந்திக்கருகில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழப்பு!

யாழ் - கண்டி பிரதான வீதியின் நுணாவில் சந்திக்கருகில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றிரவு(01) இடம்பெற்ற இந்த விபத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், வீதியோரத்தில் நடந்து சென்ற பாதசாரிகள் இருவர் மீது மோதியுள்ளது. விபத்தில் பாதசாரிகள் இருவரும் மோட்டார் சைக்கிள் ஓட்டுனரும் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன்,...

அனலைதீவு பிரதான வீதி புனரமைப்பு ஆரம்பம்!

நீண்ட காலமாக மக்களுக்கு பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்திவந்த அனலைதீவு பிரதான வீதி புனரமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த வீதியின் புனரமைப்பு அவசியம் குறித்து ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊர்காவற்றுறை நிர்வாகத்தினரிடம் குறித்த பகுதி மக்கள் கொண்டுவந்த நிலையில் அது குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. இதையடுத்து அது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துறைசார்...

அக்குரணையில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தினால் மாத்தளை கண்டி பிரதான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது!

அக்குரணையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் மாத்தளை கண்டி பிரதான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தற்போது நான்கு கட்டிடங்களுக்கு தீ பரவியுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீயை கட்டுப்படுத்த நான்கு தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது.

82 கிலோ ஆமை இறைச்சியுடன் இருவர் கைது!!!

மன்னாரிலிருந்து யாழ்ப்பாணத்திற்குச் சட்ட விரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகுதி கடல் ஆமை இறைச்சிகளுடன் 2 சந்தேக நபர்கள் நேற்றைய தினம் பள்ளமடு பிரதான வீதியில் வைத்து மன்னார் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 82 கிலோ கடலாமை இறைச்சி  மீட்கப்பட்டுள்ளது. மீன்கள் பொதி செய்து கொண்டு செல்லும் பெட்டியில்  குறித்த...

கோர விபத்து; 27 பேர் படுகாயம்…

கொழும்பு - பதுளை பிரதான வீதியில் பெல்மடுல்ல நகருக்கருகில் தனியார் பஸ்ஸொன்றும் முச்சக்கர வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதியதில் 27 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்களில் 20 பேர் கெஹாவத்தை ஆதார வைத்தியசாலையிலும் ஏழுபேர் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மூடப்படும் கொழும்பு-கண்டி பிரதான வீதி!!!

 பிரதான வீதியின், கீழ் கடுகண்ணாவை பகுதி இன்றைய தினம் மூடப்படவுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. மேலும் குறித்த பகுதியிலுள்ள ஆபத்தான கற்பாறைகள் அகற்றப்படவுள்ளதன் காரணமாக குறித்த பகுதி மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்றைய தினம் 2 மணித்தியாலங்களுக்கு குறித்த பகுதி மூடப்படவுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளமை குறிப்பித்தக்கது.

வீதியை விட்டு தடம் புரண்ட பேரூந்து..!

வெல்லவாய - தனமல்வில பிரதான வீதியின் குமாரதாச சந்தியில் தனியார் பேருந்தொன்று சற்று முன்னர் விபத்திற்கு உள்ளாகியுள்ளது. விபத்து காரணமாக 7 பாடசாலை மாணவர்கள் மற்றும் பேருந்து சாரதி உட்பட 15 பேர் வெல்லவாய ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பேருந்து சாரதிக்கு ஏற்பட்ட திடீர் நோய் நிலைமை காரணமாக இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாமென பொலிஸார்...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img