கிளிநொச்சியில் (Kilinochchi) 1 மில்லியன் அமெரிக்க டொலருடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் கிளிநொச்சி காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஏ9 வீதி கந்தசுவாமி கோவிலுக்கு முன்பாக நடைபெற்றது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

கிளிநொச்சி படையினரின் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து நேற்று (13) இரவு 8.00 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை சோதனைக்கு உட்படுத்திய போது 1மில்லியன் அமெரிக்க டொலரும் இந்த டொலரை மாற்றுவதற்க்கான சான்று பொருட்களுடன் 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here