ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆசு மாரசிங்க கடனட்டை வட்டி வீதங்களை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (14.06) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு நாட்டின் பணவீக்கம் 0.9 வீதமாக காணப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மேலும்  நாட்டின் பொருளாதாரம் ஓரளவு நிலைக்கு வந்துள்ளதால், தற்போது மக்களுக்கு நிவாரணங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அந்த வகையில் குறைந்த வருமானம் உள்ள 24 இலட்சம் குடும்பங்களுக்கு அஸ்வெசும நிவாரண வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் வெளிநாட்டு செலாவணி கையிருப்பு அதிகரிப்பால்  ரூபாவின் பெறுமதி அதிகரிக்கிறது எனவே பொருட்களின் விலை இருந்ததைவிட குறைவடைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here