மாளிகாவத்தை பகுதியில் உள்ள ஜயந்த வீரசேகர மாவத்தையில் உள்ள விழா மண்டபம் ஒன்றில் இன்று (17) காலை 10.10 மணி அளவில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர்  தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் குறித்த  தீ விபத்து சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும், சொத்து சேதம் மட்டுமே ஏற்பட்டுள்ளதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here