கொழும்பு – கோட்டையில் உள்ள பழைய செயலகத்திற்கு அருகில் உள்ள ரவுண்டானாவின் மையப் பாதையில் மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கொழும்பு துறைமுக நகர நெடுஞ்சாலையுடன் இணைக்கப்பட்ட நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு நடவடிக்கைகளின் போது இந்த எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களால் கிட்டத்தட்ட 06 அடிக்கு கீழே எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அகழ்வு நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டதுடன், இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

அந்த இடத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் சம்பவம் தொடர்பில் கொழும்பு துறைமுக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here