Wednesday, April 29, 2026
No menu items!

கோட்டை

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கோட்டை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடமையிலிருந்த போக்குவரத்து காவல்துறையினருக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் இன்று அவர் வாக்குமூலம் வழங்குவதற்காகக் கோட்டை காவல் நிலையத்தில் முன்னிலையானார். இந்தநிலையில் வாக்குமூலம் பெறப்பட்டதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மஹரகம – பிலியந்தலை வீதியில் வாகன அலங்கார நிலையத்தில் தீ விபத்து!

மஹரகம - பிலியந்தலை வீதியில் அமைந்துள்ள கொடிகமுவ பகுதியில் உள்ள வாகன அலங்கார நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்பு கோட்டை தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

தடம் புரண்ட ரயில்!

கொழும்பு கோட்டையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த 6079 இலக்க மீனகயா நகரங்களுக்கு இடையிலான கடுகதி ரயில் தடம் புரண்டுள்ளது. ஹதருஸ் கோட்டை மற்றும் ஹபரணை ரயில் நிலையங்களுக்கு இடையில் இவ்வாறு ரயில் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காட்டு யானை ஒன்று ரயிலில் மோதியதன் காரணமாக ரயில் தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  

வெசாக் பண்டிகையை முன்னிட்டு விசேட தொடருந்து சேவை!

நீண்ட விடுமுறை மற்றும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு விசேட தொடருந்து சேவை முன்னெடுக்கப்படும் என தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, இன்று முதல் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை இந்த சேவை முன்னெடுக்கப்படவுள்ளது. கொழும்பு, கோட்டையில் இருந்து பதுளை வரையிலும், பதுளையில் இருந்து கொழும்பு, கோட்டை வரையிலும் விசேட தொடருந்து சேவை முன்னெடுக்கப்படவுள்ளது. அதேநேரம் கொழும்பு, கோட்டையில்...

கொழும்பு கிரிஷ் கட்டடத்தில் இடம்பெற்ற தீ விபத்து!

தீப்பரவல் ஏற்பட்ட சர்சைக்குரிய கொழும்பு – கோட்டையில் அமைந்துள்ள கிரிஷ் கட்டடத்தை அரச இரசாயன பகுப்பாய்வாளர்கள் இன்று பரிசோதனை செய்யவுள்ளார். குறித்த கட்டடத்தின் 33ஆவது தளத்தில் நேற்று இரவு தீப்பரவல் ஏற்பட்டது. தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக கொழும்பு மாநகர சபையின் 8 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 32 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டடத்தில் இருந்த பல மரப்...

யாழ். கோட்டையின் பாதுகாப்பிற்காக கற்தூண் வேலியிடல் ஆரம்பம்..!

யாழ்ப்பாணத்தின் வரலாற்றுப் பெருமை வாய்ந்த கோட்டையின் மரபுரிமையினை பாதுகாக்கும் பொருட்டு சுற்றுலா ரீதியாக அபிவிருத்தி செய்யும் நோக்கிலும் பாதுகாப்பு கற்தூண் வேலியிடல் செயற்பாடானது நேற்று (1/29/2025) உத்தியாகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்வானது யாழ். பிரதேச தொல்லியல் காரியாலய உதவிப்பணிப்பாளர் UA பந்துலஜீவ தலைமையில் நடைபெற்றதுடன் இந் நிகழ்வில் நகர அபிவிருத்தி அதிகாரசபை பணிப்பாளர் லியனகே, உதவி பணிப்பாளர் மற்றும்...

கோட்டை புகையிரத நிலைய கால அட்டவணையில் மாற்றம்!

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து சேவையில் ஈடுபடும் புகையிரத கால அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இந்த திருத்தம் நேற்று (20) முதல் அமுல்படுத்தப்பட்டது.  

தைப் பொங்கல் தினத்தை முன்னிட்டு சிறப்பு ரயில் சேவைகள் அறிவிப்பு !

தைப் பொங்கல் பண்டிகை, சுதந்திர தினம் மற்றும் வார விடுமுறை நாட்களில் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் இலங்கை ரயில்வே சிறப்பு ரயில் சேவைகளை அறிவித்துள்ளது. 2025 ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதிகளில் கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை மற்றும் காங்கேசன்துறைக்கு ரயில்கள் இயக்கப்படும். கொழும்பு கோட்டை முதல் பதுளை வரை 7:30 PM, 10, 12,...

தடம் புரண்ட புகையிரதம்!

கொழும்பு - கோட்டை தொடருந்து நிலையத்தில் தொடருந்தொன்று இன்று (29) தடம் புரண்டுள்ளது. அனுராதபுரத்திலிருந்து பெலியத்த நோக்கிப் பயணித்த ரஜரட்ட ரெஜின தொடருந்தே இவ்வாறு தடம் புரண்டுள்ளது. இதன் காரணமாக கரையோர மார்க்கத்திலான தொடருந்து சேவைகள் தாமதமடைந்துள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.  

கொழும்பு – கோட்டை மற்றும் மருதானை இடையிலான ரயில் சேவையில் தாமதம்!

கொழும்பு - கோட்டை மற்றும் மருதானை இடையிலான ரயில்கள் தாமதமாகியுள்ளதாக இலங்கை ரயில்வே இன்று அறிவித்துள்ளது. கோட்டை புகையிரத நிலையத்தில் உள்ள புகையிரத சுவிட்சில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் மருதானை நோக்கி பயணிக்கும் அனைத்து புகையிரதங்களும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
- Advertisement -spot_img

Latest News

மின் கட்டண திருத்தம்; பொது மக்களின் ஆலோசனைகளை கோரியுள்ள அரசு

2026 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளுக்கான செலவு மதிப்பீட்டை நெஷனல் சிஸ்டம் ஒபரேட்டர் (பிவிடி) லிமிடெட் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, இலங்கை பொதுப் பயன்பாடுகள்...
- Advertisement -spot_img