கல்விசாரா ஊழியர்களின் 75 நாள் பணிப்புறக்கணிப்பை அடுத்து பல்கலைக்கழக நடவடிக்கைகள் இன்று வழமைக்குத் திரும்பும்  என கூறப்படுகிறது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் இணக்கம் காணப்பட்டதை அடுத்து பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதாக பல்கலைக்கழக தொழிற்சங்கக் குழுவின் இணைத் தலைவர் தம்மிக்க எஸ்.பியந்த தெரிவித்தார்.

சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்றுடன் 75 நாட்களாக வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இன்று பணிகள் மீள ஆரம்பிக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here