திறப்பனை, வன்னமடுவ பகுதியில் சுற்றித் திரிந்த ”அக்போ” என்ற யானையை தாக்கிய  குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யானைகள் பாதுகாப்பு அமைப்பினர் யானை தாக்கப்பட்டமை தொடர்பில்  திறப்பனை பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனையடுத்து , பொலிஸாரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here