கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தர்மபுரம் பகுதியில் இன்றைய தினம் 01.08.2024 இரவு 1.00 மணியளவில் தருமபுரம் மக்கள் குடியிருப்புகள் பகுதியில் புகுந்த காட்டு யானை.

இதனால் வாழ்வாதாரத்திற்காக செய்கை மேற்கொள்ளப்பட்ட இருபதுக்கு மேற்பட்ட வாழை 1/4 சோழச் செய்கை மற்றும் பலன் தரக்கூடிய நிலையிலிருந்த  பலாமரத்தின் பலா காய்கள் தென்னை ஒன்றும் முற்று முழுதாக சேதமாக்கி உள்ளதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மேலும் தெரிவிக்கையில் இன்றைய தினமும் தமது பகுதிக்கு யானை வரலாம் என அச்சத்தில் இருப்பதாகவும் தமது பாதுகாப்பிற்காக யானை வெடியை தந்துதவுமாறு வேண்டியுள்ளார் என பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here