லெப்டினன்ட் ஜெனரல் டென்ஸில் கொப்பேகடுவவின் 32 ஆவது நினைவு தினம் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் அராலித்துறையில் உள்ள கொப்பேகடுவவின் நினைவிடத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது டென்ஸில் கொப்பேகடுவ உள்ளிட்ட உயிரிழந்த முப்படையினருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்போது யாழ்ப்பாண மாவட்ட கட்டளைத்தளபதி சந்தன விக்கிரமசிங்க உள்ளிட்ட முப்படை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here