தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சாணக்கியன் இராசமாணிக்கம் ஆகியோர் இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong உடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் திங்கட்கிழமை சீனத் தூதுவருடன் மிகவும் சுமுகமான மற்றும் பயனுள்ள கலந்துரையாடல்களை நடத்தியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ‘X’ க்கு எடுத்துச் சொன்னது.

தற்போதைய விவகாரங்கள் மற்றும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் கவலைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here