நீதிமன்ற உத்தரவின் பேரில் இடித்துக் கொண்டிருந்த கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்ததில் அந்த இடத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த இருவர் காயமடைந்து டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹட்டன் டிக்கோயா வீதியில் காமினிபுர பிரதேசத்திற்குச் செல்லும் பாதையில் நிர்மாணிக்கப்பட்ட நான்கு மாடிக் கட்டடம் இடிந்து விழும் அபாயம் காணப்பட்டமையினால் அதனை இடிக்குமாறு ஹட்டன் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

கடந்த 30ஆம் திகதி நீதிமன்ற உத்தரவின் பேரில் கட்டடத்தை இடித்து அகற்றுமாறு உத்தரவிடப்பட்டிருந்த போதிலும், கட்டடத்தை இடிக்கும் பணி மேலும் ஒரு மாத காலம் தாமதமானதால் இன்று (14) கட்டிடம் இடிக்கும் போது கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here