உலகப் பணக்காரர்களில் ஒருவரும் மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஜுக்கர்பெர்க், 2012 இல் தனது நீண்டகால காதலியான பிரிஸில்லா சானைத் திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு மாக்ஸிமா, ஆகஸ்ட், ஆரேலியா என்று 3 மகள்கள் உள்ளனர்.
மார்க் ஜூக்கர்பெர்க், தங்கள் வீட்டின் பின்புறத்திலுள்ள தோட்டத்தில், தனது மனைவி பிரிஸில்லாவுக்காக, அவரது சிலையை நிறுவியுள்ளார்.
இந்த சிலையை, நியூயார்க் நகரத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற கலைஞர் டேனியல் அர்ஷம் என்பவரால் உருவாக்கியுள்ளார்.
மார்க்கின் இந்த இன்ஸ்டாகிராம் பதிவு வைரலாகி வரும் நிலையில், பலரும் சமூக ஊடகங்களில் மார்க் ஜூக்கர்பெர்க்குக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.








