இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.

குறித்த நிலநடுக்கம் 4.9 ரிக்டர் அளவாக பதிவாகியுள்ளது. பாரமுல்லாவில் பூமிக்கு அடியில் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் இன்று (20.08)காலை 6.45 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் ஏழு நிமிட இடைவெளியில் 4.9 மற்றும் 4.8 என்ற ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளன.

நிலநடுக்கத்தால் வீடுகள் லேசாக அதிர்ந்துள்ள நிலையில், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தற்போது வரை தகவல் வெளியாகவில்லை. இருப்பினும் சில இடங்களில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here