Saturday, June 13, 2026
No menu items!

நிலநடுக்கம்

இந்தியப் பெருங்கடலில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!!!

இந்தியப் பெருங்கடலில் இன்று அதிகாலையில் 6.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் மக்கள் வசிக்காத பகுதியில் ஏற்பட்டுள்ளதால், எந்தவொரு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. USGS தரவுகளின்படி, நிலநடுக்கம் ஏற்பட்ட பிராந்தியம் முற்றிலும் மக்கள் வசிக்காத கடல் பகுதியாகும். எனவே, உயிர்சேதம் அல்லது சொத்து சேதம்...

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்; 20 பேர் உயிரிழப்பு, 100க்கும் மேற்பட்டோர் காயம்!

ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் பாகிஸ்தான் எல்லைக்கு அருகே ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 31) இரவு 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. 8 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தினால் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத் வரை உணரப்பட்ட இந்த நிலநடுக்கம், மையப்பகுதியிலிருந்து...

துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

துருக்கியின் வடமேற்கு மாகாணமான பாலிகேசிரில் நேற்று (10) இரவு சக்திவாய்ந்த நிலைநடுக்கும் ஏற்பட்டுள்ளது. 6.1 ரிக்டர் அளவில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கத்தால் குறைந்தது ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், 29 பேர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் இந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிந்திர்கி நகரத்தை மையமாகக் கொண்ட இந்த நிலநடுக்கம், 16...

ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: பசுபிக் கடற்கரைகள் முழுவதும் ஆழிப்பேரலை எச்சரிக்கை!

ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் நேற்று (ஜூலை 29) அதிகாலை 8.7 மெக்னிடியூட் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தையடுத்து பசுபிக் பெருங்கடல் எல்லை பகுதியில் உள்ள நாடுகள் பலருக்கும் ஆழிப்பேரலை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. ஜப்பான், ஹவாய் தீவுகள், அமெரிக்காவின் கலிபோர்னியா, அலாஸ்கா, மற்றும் பல பசுபிக் தீவுகள்...

1919ன் பின்னர் முதல் மிக உயர்ந்த நிலநடுக்கம்: ஜப்பானின் தோஷிமா தீவிலிருந்து மக்கள் வெளியேற்றம்!

ஜப்பானின் ககோஷிமா மாகாணத்தில் உள்ள ஒரு தீவில் வசிப்பவர்கள் தொடர்ச்சியான நிலநடுக்கங்களுக்கு மத்தியில் தீவிலிருந்து வெளியேறத் தொடங்கியுள்ளனர். 1919 ஆம் ஆண்டு ஒப்பிடத்தக்க தரவுகள் கிடைத்ததிலிருந்து, வியாழக்கிழமை (நேற்று) ஏற்பட்ட குறைந்த 6 நிலநடுக்கம், தோஷிமா கிராமத்தில் இவ்வளவு தீவிரம் கொண்ட முதல் நிலநடுக்கம் என்று ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை (இன்று) காலை,...

பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!

தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடு பப்புவா நியூ கினியா. இங்குள்ள கடற்கரை பகுதிகளில் நேற்று இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 6.2 ரிச்டர் அளவில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் 3.65 டிகிரி தெற்கு அட்சரேகையிலும், 144.96...

இந்தோனேசியாவில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம்..!

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 2.50 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. வடக்கு சுமத்ராவில் 58 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 4.6 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன. ஆனாலும், இந்த நிலநடுக்கத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்தோனேசியாவில் அடிக்கடி...

இந்தோனேசியாவில் ஏற்பட்ட  திடீர் நிலநடுக்கம்!

இந்தோனேசியாவில் இன்று (07) திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. மதியம் 12.39 மணியளவில் (இலங்கை நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு நிலையம் தெரிவித்துள்ளது. 70 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 1.13 டிகிரி வடக்கு அட்சரேகையிலும் 97.54 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என...

ஈக்குவடாரில் நிலநடுக்கம்..!

தென் அமெரிக்க நாடான ஈக்குவடாரின் பசிபிக் கடற்கரையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிச்டா் அளவுகோலில் 6.3 அலகுகளாகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால், நாட்டின் வடக்குப் பகுதிகள் அதிந்தன. இதில் சில கட்டடங்கள் சேதமடைந்ததாக  முதல்கட்ட தகவல்கள் கூறினாலும், உயிரிழப்புகளோ காயங்களோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை. எஸ்மரால்டாஸ் நகரத்திலிருந்து 20.9 கி.மீ. வடகிழக்கே,...

இன்று மீண்டும் மியன்மாரில் நில அதிர்வு..!

மியன்மாரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.54 மணியளவில் 5.6 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது என்றும் இதனால் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. உயிரிழப்புகள் அல்லது சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img