பல்வேறு ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களுக்கு தமது பேருந்துகள் பயன்படுத்தப்பட்ட போதிலும், வழமையான செயற்பாடுகள் பாதிக்கப்படவில்லை என இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது.

பேரூந்து பற்றாக்குறை தொடர்பில் பொதுமக்களின் முறைப்பாடுகள் எதுவும் கிடைக்கவில்லை என தலைவர் லலித் டி அல்விஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.

தேர்தல் காலம் முழுவதும் பொது வசதிகள் பேணப்படுவதை இலங்கை போக்குவரத்து சபை உறுதி செய்யும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அண்மைய அறிவித்தலுக்கு இணங்க, ஜனாதிபதித் தேர்தலுக்காக பேருந்துகளை வழங்குவதற்கான செலவினங்கள் குறித்த அறிக்கையை இலங்கை போக்குவரத்து சபை சமர்ப்பித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here