இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்கள் யாழ்ப்பாணம் பருத்தித்துறை  கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காக இலங்கை  கடற்படையினர் யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பில் மேற்கொண்ட நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

11 இந்திய மீனவர்களுடன் கைப்பற்றப்பட்ட இழுவை படகு இலங்கை கடற்படையினரால் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகளை மயிலிட்டி கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here