எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இலங்கை தேர்தல் ஆணைக்குழுவிற்கு 925 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஜூலை 31ஆம் திகதி முதல் ஒகஸ்ட் 26ஆம் திகதி வரை மொத்தம் 925 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், ஒரு மாதத்திற்குள் கிட்டத்தட்ட 1,000 முறைப்பாடுகள் பெறுவது மிகவும் கவலைக்குரிய விடயம் என்று தேர்தல் ஆணைக்குழு வலியுறுத்தியது.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பிலான முறைப்பாடுகள் அதிகரித்து வருவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here