நகைச்சுவை நடிகர் பிஜிலி ரமேஷ் காலமானார்.
பிரபல யூடியூப் வலைத்தளம் நடத்திய நகைச்சுவை நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று தமது வசனங்களால் அனைவராலும் ஈர்க்கப்பட்டவராவார்.
நட்பே துணை என்ற திரைப்படத்தின் மூலம் கடந்த 2019ஆம் ஆண்டு தமிழ் திரையுலகுக்கு அறிமுகமாகியவர் பிஜிலி ரமேஷ்.
தொடர்ந்து பொன்மகள் வந்தாள், ஆடை உள்ளிட்ட திரைப்படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
அதுமட்டுமின்றி குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கோமாளியாக ஒரு சீசனில் பங்கேற்றிருந்தார்.
இந்நிலையில் அளவுக்கதிகமான குடிப்பழக்கத்தால் கல்லீரல் மற்றும் கால்கள், முகம் என வீங்கி, படுத்த படுக்கையில் இருந்த அவர் இன்று காலை உயிரிழந்துள்ளார்.
இவரது இறப்புக்கு திரையுலகினர் அனைவரும் தமது ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்து வருகின்றனர்.








